POONACHI or The Story of a  Black Goat :

                                                                -Perumal Murugan.


                             

"பூனாட்சி" இந்த கதை முழுவதும் ஒரு வெள்ளாட்டுக்குட்டியின் வாழ்க்கையை பற்றி கூறுவதாக அமைந்துள்ளது.இந்த புத்தகம் படிப்பதற்கு எளிமையாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் அமைந்துள்ளது.ஒரு ஆட்டுக்குட்டியின் மனநிலை எப்படியெல்லாம் இருக்கும் என்பதை ஆட்டுக்குட்டியின் மனநிலையில் இருந்து மிகவும் அழகாக பெருமாள் முருகன் எழுதியுள்ளார்.

                பூனாட்சி என்பது ஒரு பெண் கருப்பு வெள்ளாட்டுக்குட்டி. பூனாட்சி எங்கையோ ஒரு இடத்தில் பிறக்கிறது.மேலும் இது ஒரு அதிசய பிறவி என்கிறார்.ஏனென்றால் பூனாட்சி ஏழாவது குட்டியாக பிறக்கிறது.ஒரு கிழவன் கிழவியிடம் இதை கூறி ஒருவர் பூனாச்சியை அவர்களிடம் ஒப்படைத்து நன்றாக வளர்க்கும் படி கூறுகிறார்.இந்த கிழவன் கிழவி ஆட்டுக்குட்டிகளை வளர்த்து அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.அந்த குடும்பத்தில் புது உறவாக பூனாட்சி வருகிறாள்.இதனால் இவர்கள் என்ன பயன் அடைகிறார்கள் எதை இழக்கிறார்கள்,பூனாட்சி என்ன என்ன பயன் அடைகிறாள் எதை இழக்கிறாள் அது தான் "பூனாட்சி ஒரு வெள்ளாட்டுக்குட்டியின் கதை"
               கிழவன் கிழவி ஒரு கிராமத்தில் வசிக்கின்றனர்.இங்கு மின்சார வசதி ஏதும் இல்லை.இவர்கள் இரவு நேரத்தில் விளக்கு கூட ஏற்றுவதில்லை.இந்த கிழவன் கிழவி தங்களது வாழ்க்கையில் அனைத்தையும் பேசி முடித்திருப்பார்கள்.பூனாட்சி வந்த அன்றிரவு பல வருடங்கள் கழித்து விளக்கு ஏற்றுகிறார்கள்.மேலும் அன்றிரவு முழுவதும் பூனாட்சி பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
               பூனாட்சி பிறந்ததும் அவள் அம்மாவை விட்டு பிரிந்ததால் பாலுக்காக கஷ்டப்படுகிறாள்.சாப்பாட்டிற்கே வழி இல்லாத இந்த கிழவன் கிழவி எப்படி பூனாச்சிக்கு உணவளிக்கிறார்கள் என்பதில் தொடங்கி பூனாட்சி பருவம் எய்துகிறாள்.அதன் முன்பு பூனாச்சிக்கு ஒரு காதல் உள்ளது.அந்த காதலன் பெயர் "பூவன்" எனும் பெரு ஆண் ஆடு.இந்த பூவனை முதன் முதலாக கிழவியின் பெண்ணின் வீட்டில் பூனாட்சி பார்க்கிறாள்.அப்படி கிழவியின் பெண்ணின் வீட்டிற்கு செல்லும் வழியில் பூனாட்சி தொலைந்து விடுகிறாள்.பூனாச்சியை தேடி கிழவி படும் கஷ்டங்கள் பின்பு பூவனை பூனாட்சி முதன்முறையாக காணும் காட்சி அழகாகா பெருமாள் முருகன் கூறுகிறார்.
              பூனாட்சி ஆசையாக வளர்க்கப்பட்டாலும் அதன் கணவனை காதலனை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டா? என கேட்டால் இல்லை.அதை அந்த கிழவன் கிழவி தான் பூனாட்சி யாருடன் சேர வேண்டும் என முடிவு செய்கிறார்கள்.
               நீண்டநாள் கழித்து புவனும் பூனாச்சியும் சந்தித்துக்கொள்கிறார்கள்.அப்போது பூனாட்சி பூவனை பார்த்து நீ இன்னும் உயிருடன் தான் இருக்கிறாயா? என கேற்கின்றாள்.பூவன் அதற்கு நான் உயிருடன் இருப்பேன் என நானே எதிர்பார்க்கவில்லை என கூறுகிறான்.ஏனென்றால் ஆன் ஆட்டுக்குட்டிகளை கொன்று சாப்பிட்டு விடுவார்கள்.இல்லையென்றால் கடவுளுக்காக வெட்டி விடுவார்கள்.
                பூனாட்சி உடன் இருந்த ஒரு ஆடு தன் உயிரை விடுவதை பார்க்குபோது இவர்கள் தன் மீது கொண்ட பாசமும்  உண்மைதானா? என சந்தேகம் ஏற்படுகிறது.நம் உலகை போன்றே பூனாச்சியின் உலகம் அழகானது இல்லை.ஏனென்றால் பூனாட்சி அவளுக்கு தேவையானதை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை.அவளுக்கான இணையை தேர்ந்தெடுப்பதிலும்,தன் பிள்ளைகளை கண்முன்னே வெட்டுவதும் என பூனாச்சியின் வாழ்க்கை உள்ளது.இவரே பூனாட்சியின் வாழ்கை இறுதி வரை ஓடுகிறது.
                 மேலும் பூனாட்சி அவள் முதன்முறையாக மேய்ச்சலுக்கு செல்லும் போது கிழவனின் தோள் மீது அமர்ந்து செல்வது குறித்தும்,கிளவியும் பூனாச்சியும் பேசிக்கொள்ளும் தருணங்கள் குறித்தும்  பெருமாள் முருகன் அழகாக கூறுகிறார்.