Study Less,Study Smart Summary in Tamil:-

                                                                             -Marty Labdell.





            நாம் பொதுவாக படிக்க ஆரம்பிக்கும் போது சிறுது நேரம் மட்டுமே படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது.இதை "Prof.Marty Lobdell" எப்படி குறைந்த நேரத்தில் படித்து அதிக மதிப்பெண் பெறுவது என 7 வழிகள் கூறுகிறார்.

1.Break the Study Sessions to Small Sessions:-

             Prof.Marty Lobdell ஒரு சராசரி மாணவர் படிக்க ஆரம்பித்து 20-30 நிமிடங்களில் களைப்படைந்துவிடுவர்,இதே போல் ஒரு நன்றாக படிக்கும் மாணவர் படிக்க ஆரம்பித்து 50-60 நிமிடங்களில் கலைப்படைந்துவிடுவர்.இன்னும் சிலர் நாம் அதிக நேரம் படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம் என நினைக்கின்றனர் ஆனால் அதை அவர்களால் செயல்படுத்த முடிவதில்லை.
             எனவே,Prof.Marty Lobdell நாம் இப்போது படிக்க ஆரம்பிக்கும் பொது நம் பாடப்பகுதியை சிறுசிறு பகுதிகளாக பிரித்து சற்று இடைவெளி விட்டு படிக்கலாம் என்கிறார்.அந்த இடைவெளியில் நமக்கு பிடித்த உணவுகள்,யோகா மற்றும் உங்களை நீங்களே பாராட்டி (Encourage) போன்றவற்றை செய்யலாம்.இவ்வாறு நாம் படித்தால் அதிக நேரம் படிக்கலாம்.மேலும் நம் படிக்கும் போது களைப்படையமாட்டோம். 

2.Create a study space:- 

             நீங்கள் உங்களுக்கென படிப்பதற்காக ஒரு இடத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்.படிக்கும் போதெல்லாம் அங்கு சென்று எந்தவித இடையூறுமின்றி படிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாம் என  Prof.Marty Lobdell கூறுகிறார்.ஓர் இடத்தில் இல்லாமல் நடந்துகொண்டு படித்தால் கவன சிதறல்  ஏற்படும்.எனவே நீங்கள் படிப்பதெற்கென  ஒரு இடத்தை ஒதுக்கி கொள்ளுங்கள்.

3.Study Actively:-

             நாம் படிக்கும்போது சுறுசுறுப்பாக படிக்க வேண்டும்.இப்போது நாம் ஒரு புத்தகத்தை படிக்கும் போது அதில் உள்ள வார்த்தைகளை புரிந்து படிக்க வேண்டும்.இதனால் நீங்கள் மற்றவர்களுக்கும் கூட எடுத்துரைக்க முடியும்.இதனால் உங்களுக்கும் மேலும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.இவ்வாறு செய்யும் பொழுது நீங்கள் உங்கள் புத்தகத்தை மூடி வைத்துக்கொள்ளுங்கள்.
              நாம் படிக்கும் பொது அதில் உள்ள மிகவும் முக்கியமான வார்த்தைகளை அடிக்கோடிட்டு வைத்துக்கொண்டால் நாம் திரும்பவும் படிக்கும் போதுநமக்கு எளிமையாக இருக்கும்.

4.Take ActiveNotes:-

             Prof.Marty Lobdell இதில் நாம் படித்ததையோ அல்லது கவனித்ததையோ நமக்கு புரியும் வகையில் எழுதி வைத்துக் கொள்ளவேண்டும்.இது நமக்கு தேர்வு நேரங்களில் நாம் எழுதிவைத்ததை சற்று பார்த்தலே போதும்.இப்போது உங்களுக்கு ஒரு தலைப்பு புரியவில்லையென்றால் அதை உங்கள் நண்பர்களிடமோ அல்லது ஆசிரியரிடமோ கேட்டு உங்களுக்கு புரியும் வகையில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

5.Teach or Summarize the Learnt Concepts to Others:-

             நீங்கள் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள சிறந்த வழி அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுப்பதில் உள்ளது.இதனால் 2 பயன்கள் உண்டு.
          1.நீங்கள் சுறுசுறுப்பாக படிப்பீர்கள்.அவ்வாறு படித்ததை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதினால் உங்கள் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.
          2.இதனால் நீங்கள் படித்ததில் எவ்வளவு நீங்கள் நினைவில் வைத்து உள்ளீர்கள் என நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

6.A Technique toRead TextBooks:- 

          Prof.Marty Lobdell புத்தகத்தை படிப்பதற்கென ஒரு வழிமுறையை கூறுகிறார். 

                                                S Q 3R technique.

இதை 1946-ல் "பிரான்சிஸ் ராபின்சன்" என்பவர் படிப்பதற்காக வடிவமைத்துள்ளார்.    

                                Survey Question Read Recite Review

இதன் அர்த்தம் நீங்கள் படிக்கும் புத்தகத்தின் கருத்தை புரிந்துகொள்ளுதல்,கேள்வி கேற்பது,படிப்பது,படித்ததை நமக்கு புரிந்த வகையில் எழுதிவைத்து கொள்வது என வகைப்படுத்திகிறார்கள்.

7.Use Pneumonics to Memorize Facts:- 

            நீங்கள் படித்ததை ஒரு புகைப்படமாகவோ அல்லது கதையாகவோ மாற்றி உங்கள் மனதில் பதியவைத்து கொள்ளுங்கள் என Prof.Marty Lobdell கூறுகிறார். 
    இதனையே Prof.Marty Lobdell  "Study Less,Study Smart" என்ற புத்தகத்தில் கூறுகிறார்.


                                           நன்றி........!