Rich dad Poor dad Summary in Tamil
(Robert T.Kiyosaki).
நம் எல்லோருக்கும் "Rich Dad Poor Dad" புத்தகத்தை பற்றி தெரிந்திருக்கும்.ஆனால் Rich Dad Poor Dad தொடரில் உள்ள "Rich Dad's Cashflow Quadrant" இந்த புத்தகத்தை பற்றி தெரிந்திருக்க மாட்டோம்.அது பற்றி இந்த இந்த கட்டுரையில் காண்போம்.
Understanding the cashflow Quarant:-
(பணப்புழக்கத்தின் அளவு ):-
நாம் நம் வாழ்க்கையில் 22 முதல் 30 வயதிற்குள் வருவாய் ஈட்ட ஆரம்பிபோம்.அப்படி நாம் சம்பாரிக்கும் வழிமுறையை Robert T.Kiyosaki நான்கு வழிகளாக பிரிக்கிறார்.
இதில்,
1).Employees - ஊழியர்கள்.
2).Self Employers - சுய ஊழியர்கள்.
3).Business Owners - வணிக உரிமையாளர்கள்.
4).Investor - முதலீட்டாளர்கள்.
1.Employees( ஊழியர்கள்):-
இதில் தான் உலகத்தில் 95% மக்கள் வருவாய் ஈட்டுகின்றனர்.ஆனால் இதில் இருந்து வெறும் 5% மட்டுமே வருவாய் ஈட்டமுடியும் என Robert T.Kiyosaki கூறுகிறார்.மேலும் இதில் பெரும்பாலோர் அவர்களது வேலையை தக்கவைத்து கொள்ள விரும்புவதால் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்கு இறுதி வரை சாதாரண ஊழியர்களாகவே இருக்க முடியும்.இதனால் வரும் வருமானத்தை போதும் என நினைத்தும்,அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகவும் நினைக்கின்றனர்.பின்பு வாழ்க்கையின் இறுதியில் "நம் வாழ்க்கையில் நாம் வெற்றியடையவில்லை என நினைத்து வருந்துகின்றனர்".
2.Self Employers(சுய ஊழியர்கள்):-
Self Employers மற்றும் Employees இவர்களுக்கு இடையேயான வேறுபாடு Employees இவர்களுக்கு மேல் ஒரு முதலாளி என்று ஒருவர் இருப்பார்,ஆனால் Self Employees இவர்களுக்கு இவர்களே முதலாளி மற்றும் ஊழியர்களாக இருந்து இயன்றவரை வருவாய் ஈட்டுகின்றனர்.இவர்கள் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்றால் அதிகமாக வேலை செய்ய வேண்டும்.
3.Business Owners(வணிக உரிமையாளர்கள்):-
இதில் இவர்களது வேலை அவர்களது திறமையை பொறுத்தது.இவர்கள் தங்களது அறிவை (திறமையை) பயன்படுத்தி தொழில் நிறுவனத்தை நிறுவி அதில் அவர்களுக்கு தேவையான Employees பயன்படுத்தி சரியான முறையில் அதிக வருவாய் ஈட்டுகின்றனர்.இதனை Robert T.Kiyosaki அதிக வருவாய் ஈட்ட சரியான வழி என்கிறார்.இது ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தாலும் உங்களது கடின உழைப்பும்,திறமையும் பயன்படுத்தினால் நீங்கள் பணக்காரராக மாறலாம்.
4.Investors(முதலீட்டாளர்கள்):-
இதில் இவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை சரியான முறையில் பயன்படுத்தி அதிக வருவாய் ஈட்டுகின்றனர்.இதுபற்றி புகழ்ப்பெற்ற Investor-ஆக உள்ள "வாரன் பவர்ட்" கூறுகையில் நாம் தூங்கும் போதும் வருவாய் ஈட்ட ஏதாவது ஒரு வழியை நாம் கண்டுபுடிக்கவில்லை என்றால் நாம் வாழ்க்கையில் இறுதி கட்டம் வரை உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என கூறுகிறார்.
0 Comments