LIFE'S AMAZING SECRETS : HOW TO FIND BALANCE AND PURPOSE IN YOUR LIFE
-Gaur Gopal Das.
நாம் இப்பொழுது ஒரு மகிழுந்தில் (Car) உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.நாம் ஒரு இடத்தை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.அப்பொழுது நாம் செல்லும் காரில் பெட்ரோல் சற்று குறைவாக உள்ளது அதனால் நாம் செல்லும் இடத்திற்கு முன்பே கார் நின்றுவிடுகிறது.இதை நாம் முன்பே கவனித்து பெட்ரோல் போட்டு இருந்தால் நாம் செல்லும் இலக்கை அடைந்திருப்போம்.அதேபோல் தான் நம் வாழ்க்கையும், எதிர்காலத்திக்காக முன்பே அதற்கு தேவையானவற்றை செய்தால் நம் இலக்கை எளிதாக அடையலாம்.இதை பற்றி "LIFE'S AMAZING SECRETS" எனும் புத்தகத்தில் "GAUR GOPAL DAS" கூறுகிறார்.
GAUR GOPAL DAS நம் வாழ்க்கையை ஒரு காருடன் ஒப்பிடுகிறார்.அதில் கார் நன்றாக செல்ல காரிற்கு முக்கியமான நான்கு சக்கரங்களை போல் நம் வாழ்க்கை நன்றாக செல்ல நான்கு முக்கிய திறன்களை குறிப்பிடுகிறார்.அது பற்றி கீழே காணப்போம்.
1.Personal Life.
2.Relationship.
3.Work Life.
4.Social Contribution.
1.Personal Life:
நீங்கள் எப்பொழுதாவது என்னடா வாழ்க்கை இது என உங்களுக்கு தோணும்போது உங்கள் கடந்த காலத்தில் மகிழ்ச்சி தந்த சூழ்நிலைகள்,அல்லது ஒரு நபர் அதை பற்றி நினைத்து பாருங்கள் அது உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை தரலாம் என்கிறார்.அடுத்ததாக இப்போது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனை என்றால் தேவையில்லாமல் உட்கர்ந்து சிந்தித்து அதற்கு வருத்தப்பட்டு கொண்டிருக்காமல் அந்த பிரச்சனை சரி செய்ய பாருங்கள்.இதனால் நாம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம் என்கிறார்.தேவையில்லாமல் சிந்தித்து கொண்டிருப்பதனால் நம் வாழ்க்கையில் எந்தவித பயனும் இல்லை என்கிறார்.உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
2.Relationship:
நம் வாழ்க்கையின் இறுதி வரை நமக்கு ஏற்படும் நல்லது கெட்டது அனைத்திலும் நம் உறவுகள் தான் முன்னிலை வகிக்கின்றனர்.அப்படிப்பட்ட உறவுகளை தக்க வைத்து கொள்வது எப்படி என GAUR GOPAL DAS கூறுவதை காண்போம்.இதில் ஐந்து வகையான மக்கள் உள்ளனர்.அதில் ஒன்று அவர்கள் கண்ணுக்கு நல்லதே தெரியாது.பார்ப்பதெல்லாம் கெட்டதாகவே தெரியும்.இரண்டாவது இவர்களுக்கு நல்லதும் கெட்டதும் தெரியும் ஆனால் கெட்டத்தை மட்டுமே பார்ப்பார்கள்.மூன்றாவது இவர்களுக்கும் நல்லது கெட்டது தெரியும் அனால் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள்.நான்காவது இவர்களுக்கும் நல்லதும் கெட்டதும் தெரியும் ஆனால் நல்லதை மட்டும் பார்ப்பார்கள்.ஐந்தாவது இவர்களுக்கு நல்லது மட்டுமே தெரியும்.இதில் பெரும்பாலும் நம்மால் ஐந்தாவதாக இருக்க முடியாது.ஆனால் நான்காவது நல்லது கெட்டது தெரிந்து அதில் நல்லதை மட்டும் பார்க்க முயற்சித்தால் உங்கள் உறவுகள் மேலும் மேலும் தொடரும் என்கிறார்.
3.Work Life:
நாம் வாழ்க்கையில் 80% நேரத்தை வேலை செய்வதில் செலவிடுகிறோம்.அப்படிப்பட்ட வேலை நமக்கு பிடித்த மாதிரியிருக்க வேண்டும்.அப்படி செய்யும்பொழுது நம் வாழ்க்கையின் தரம் உயரும்.ஒருவர் இப்போது அவருக்கு பிடித்த இசையை பாடி பிரபலம் அடைந்தால் நாமும் அதையே செய்ய வேண்டும் என்பதில்லை.நமக்கு பிடித்த வேலையை செய்து நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
4.Social Contribution:
இந்த நான்காவது சக்கரம் மிகவும் முக்கியமானது என்கிறார்.நாம் வாழ்க்கையில் 80% நேரத்தை வேலை செய்வதில் செலவிடுவது நாம் சமூகத்தில் உயர்வதற்கும்,நமக்கு தேவையான பணத்தை ஈட்டுவதற்குமே ஆகும்.மீதமுள்ள 20% நேரத்தை Personal Life -காக செலவிடுகிறோம்.இதில் உங்களுக்கு பிடித்தவற்றை எல்லாம் செய்யுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் மேலும் உங்களால் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.இதனால் உங்களுக்கும் ஒரு மனத்திருப்தி கிடைக்கும் மேலும் நீங்கள் உதவும் நபரும் மகிச்சியடைவார்.
இந்த நான்கும் நம் வாழ்க்கைக்கு இன்றிமையாதது என GAUR GOPAL DAS கூறுகிறார்.
0 Comments