Emotional Intelligence
Why it can matter more than IQ
-Daniel Goleman
இந்த உலகத்தில் நாம் தான் அனைத்திலும் சிறந்தவராக இருக்க வேண்டும் என நினைப்போம்.அதற்காக நிறைய செயல்களை செய்வோம் உதாரணமாக,புத்தகம் படிப்பது,மூளை சம்பத்தப்பட்ட விளையாட்டுகளை விளையாடுவது என செய்யும் போது நமது I'Q(Intelligence Quotient) அளவு அதிகமாகி புத்திசாலியாக மாறலாம் என நினைப்போம்.ஆனால் நமது நிஜ வாழ்க்கையில் I'Q-யை விட E'Q(Emotional Quotient) அதிகப்படுத்துவதில் தான் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
I'Q < E'Q
இது தான் நாம் நிஜ வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்,சூழ்நிலைகளை எதிர் கொள்ள உதவும்.
ஒருவருடைய I'Q அளவு எவ்வளவு அதிகமா இருந்தாலும் அவர் கோபமாக அல்லது சோகமாக இருக்கும் போது அவரிடம் வேலையை கொடுத்து செய்ய சொன்னால் மேலும் அவர் நம் மீது கோவம் அடைவார்.ஏனென்றால் அவருடைய உணர்ச்சிகள்(Emotional) அவரை logical-ஆக யோசிக்க விடாமல் செய்து விடும்.அதுவே அவரால் அந்த உணர்ச்சியை கட்டுபடுத்த முடியும் என்றால் அதிலிருந்து வெளிவந்து அடுத்து என்னவோ அதை செய்வார்கள்.எனவே Emotion Intelligence எப்படி கட்டுபடுத்துவது என காண்போம்.
1.Understanding Yourself :-
நீங்கள் முதலில் உங்களின் உணர்ச்சியை(Emotional) பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.நீங்கள் எப்பொழுது கோவமாக இருப்பீர்கள் எப்பொழுது சோகமாக இருப்பீர்கள் எதனால் கோவப்படுகிறீர்கள் எதனால் சோகமாக இருக்குறீர்கள் என உங்களை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.சில சமயம் கோவம் வந்து மற்றவர்களை திட்டிவிடுகிறோம்.பின் சற்று நேரம் கழித்து நாம் அவர்களிடம் அவ்வாறு பேசி இருக்க கூடாது என வருத்தப்படுகிறோம்.அதனால் தான் நம்மை எது எல்லாம் கோவப்படுத்துகிறது எது எல்லாம் சோகப்படுத்துகிறது தெரிந்து கொள்ளவேண்டும்.இதை எல்லாம் கவனித்து உங்களை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.பின் எல்லாவற்றையும் சரிசெய்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
2.Reframing Negative Emotions :-
Negativity(எதிர்மறை) தான் ஒரு மனிதனின் தோல்விக்கு காரணமாகிறது.அதனால் தான் இந்த உலகத்தில் உள்ள புகழ்பெற்றவர்கள் Negativity(எதிர்மறை எண்ணங்கள்) தள்ளி வைக்கின்றனர்.இவ்வாறு நாமும் இந்த எதிர்மறை எண்ணங்களை தள்ளி வைத்தாலும் சோகம்,கோவம் என இந்த இரண்டும் நமக்கு தொடர்ந்து பிரச்சனைகளை கொடுத்து கொண்டே இருக்கும்.ஒருவரின் வாழ்க்கையில் சோகம் என்பது அவரின் உடல்நல ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.கோவம் என்பது அவரின் உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவே நாம் Learn to Negativity Reframe.
உதாரணமாக ஒருவர் அவருடைய அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீட்டுற்கு காரில் சென்று கொண்டிருக்கிறார்.அப்போது மற்றொரு கார் இவரை வேகமாக முந்தி செல்கிறது.அவ்வாறு செல்லும் பொது சிறு தவறு ஏற்பட்டிருந்தாலும் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.இது இவரை கோவபடுத்தி விட்டது யார் இவன் இவ்வாறு அறிவில்லாமல் செல்கிறான்.இதனால் அவரை திட்ட இவரும் எதிர் வழியில் முந்தி செல்கிறார்.அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த வாகனத்தின் மீது மோதி பெரும் விபத்து ஏற்படுகிறது.மேலும் அந்த விபத்தில் இவர் உயிரிழந்துவிடுகிறார்.இவர் அவரின் கோவத்தை கட்டுப்படுத்தி இருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம்.அவர் கோவப்படாமல் வேறு விதமா யோசித்திருந்தால் அதாவது வ்யார் இவர் இப்படி வேகமாக செல்கிறார் எதாவது முக்கியமான வேலை இருக்கிறது போல அல்லது யாருக்கு என்ன ஆயிற்றோ என மாற்றி கோவத்தை விடுத்து விபத்தை தவிர்த்திருக்கலாம்.
3.Be Empathetic :-
இப்போது நீங்கள் ஒரு படத்தை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதில் திடீரென பொறு சோகமான நிகழ்வு ஏற்படுகிறது என்றால் நீங்களும் சோகமா இருப்பீர்கள்.அது அதே படத்தின் இறுதியில் கதாநாயகன் வெற்றிபெற்றால் நீங்களே வெற்றி பெற்றது போல் சந்தோஷப்படுவீர்கள்.இதேபோல் உங்களால் மற்றொருவரின் மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தால் அவர்களின் மனநிலைமைக்கு ஏற்ப உங்களால் அவர்களிடம் பேச முடியும்.
நீங்கள் உங்களை நன்றாக புரிந்து கொண்டால் Negative Emotion உங்களால் கட்டுபடுத்த முடியும்.இதனால் உங்களின் EQ அதிகரிக்கும் என Daniel Goleman கூறுகிறார்.
0 Comments