பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு 

     BE (Any Department),B.Tech,MCA,MSc(CS,IT),BCA,மற்றும் BSc(CS,IT) படித்த மாணவர்கள் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்வதற்கு தேவையான டெக்னோலஜி  படித்திருந்தால் சாப்ட்வேர் ஏஞ்சினீர் பணியில் சேர முடியும் என்று Maasmind நிறுவன மேலாளர் தெரிவித்தார்.பெரும்பாலான ஐ.டி. கம்பெனிகள் டெக்னாலஜி தெரிந்தவர்களை  மட்டும் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.ஐ.டி. துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களால் நடத்தப்படும் Maasmind நிறுவனத்தால் தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளியில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் - அமைச்சர் 

     சென்னையில் அப்துல்கலாம் நினைவு நாளை ஒட்டி "எழுதுக இயக்கம்" சார்பில் நடைபெற்ற விழாவில் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.அதையடுத்து நாட்டில் மூன்று மாநிலங்களில் விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு  வரலாம் என்ற அடிப்படையில் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறினார்.

தனியார் பள்ளிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு :-

          பொருளாதாரம் பாதிக்கபட்ட பெற்றோர்களிடம் 75% மற்றும் பாதிக்கப்படாத பெற்றோர்களிடம் 85% கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளது.தனியார் பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக ஆதாரத்துடன் புகார் வந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கபடும்.

மறுதேர்வெழுத 23 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பம்    

          பிளஸ்2 மதிப்பெண் முறையில் திருப்தி இல்லாதவர்கள் மறுதேர்வெழுத விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால் மறுதேர்வெழுத இதுவரை 23 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.   

மாற்று திறனாளிகளுக்கு பிளஸ் 2 துணைத்தேர்வுகள் ரத்து 

      மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதில் இருந்து ஏற்கனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.துணை தேர்வுகளை  தனித்தேர்வாக எழுத  விண்ணப்பித்த   மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும்  தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண்கள் அளிப்பது குறித்து நடைமுறையை வடிவமைத்து உரிய உத்தரவு பள்ளிக்கல்வி துறையால் வெளியிடப்படும்.

 குரூப் 1 தேர்வு :தமிழ் வழியில் கற்ற சான்றுகளை பதிவேற்ற அறிவுறுத்தல் 

     கடந்த ஜனவரி 3-ஆம் தேதியில் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது இதில், தமிழ் வழியில் பயின்று தேர்வினை எதிட்கொண்டவர்கள் உள்ளனர்.தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கல்வி தகுதிகளை தமிழ்   வழியில் பயின்றதாக குறிப்பிட்டவர்கள் அதற்குரிய சான்றிதழ்களை தேர்வாணைய இணையதள த்தில் செப்டம்பர்  16-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
     பள்ளி முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை,இரண்டாம் ஆண்டு அல்லது பட்டய படிப்பு,பட்ட படிப்பு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதை தவிர தேர்வாணைய இணையத்தளம் www.tnpsc.gov.in மூலமாகவும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.